இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 108 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு!

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளன.

பல ஆண்டு காலமாக இராணுவத்தின் வசமிருந்த குறித்த காணிகள் 2019 ஆம் ஆண்டு விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நாளைய தினம் பொது மக்களுக்கு சொந்தமான 108 ஏக்கர் காணிகள் இராணுவத்தினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் காணி பத்திரங்கள் வழங்கி விடுவிக்கப்படவுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் காணி விடுவிப்பு நிகழ்வில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.