தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை