622 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை!
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 622 கைதிகள் இன்று (04) ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் கைதிகளும் இவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர சிறைச்சாலையில் நல்லடக்கத்துடன் செயற்பட்ட 31 கைதிகளும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பின்னர் நாளை விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை