யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கரிநாள் பேரணி!
வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் கண்டித்து இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு கரிநாள் என வலியுறுத்தி பேரணிகள் இடம்பெறுகின்றன.
இந் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கரிநாள் பேரணி இடம் பெற்று வருகிறது.
குறித்த பேரணியில், நாட்டின் சுதந்திரம் என்பது சிங்கள மக்களுக்கு மட்டும் தானா ?, ஒற்றையாட்சியையும் 13ம் திருத்ததையும் முற்றுமுழுதாக நிராகரிப்போம் எனும் பதாகைகளுடன் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை