பங்களாதேஷுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷ் வௌிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமனை சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதேபோல், பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷுக்கு தனது நன்றிகளை தெரிவித்திருந்தார்.
கருத்துக்களேதுமில்லை