தமிழர்களின் தலையெழுத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்த பிரித்தானியர்கள் – சாணக்கியன் ஆவேசம்!

தமிழர்களின் பிதா தந்தை செல்வாவே என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிதா என்று அழைக்கப்படும் டி.எஸ்.சேனநாயக்க இலங்கைக்கு மட்டும் தான் பிதா, தமிழர்களுக்கு அவர் பிதா இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் 75வது சுதந்திர தினத்தினை இருள் சூழ்ந்த சுதந்திரம் என பிரகடனப்படுத்தி, மட்டக்களப்பில் இன்று இலங்கை தமிழரசுக்கட்சி மேற்கொண்ட  பேராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத்  தெரிவித்த அவர்,

“கடன் இல்லாத நாட்டையும் தமிழர்களின் தலை எழுத்தையும் பிரித்தானியர்கள் சிங்களவர்களிடம் ஒப்படைத்திருந்தனர், ஆனால் இன்று நாடு வங்குரோத்து நிலைக்கு சென்று விட்டது.

ஆனால் இந்த நாட்டிற்கு அதிகமான அந்நியச்செலாவணியை ஈட்டித்தருகின்ற மலையக தமிழ் மக்களின் குடியுரிமையை பறித்தவர் டி.எஸ்.சேனநாயக்க, எனினும் 75 ஆண்டுகள் கடந்தும் அதிகளவான அந்நிய செலாவாணியை ஈட்டித்தருவது மலையக தமிழர்களே என்பதை பெருமையுடன் கூறுகின்றேன்.

அன்று தமிழர்களை அடித்து கலைத்தார்கள் ஆனால் இன்று நாட்டின் மிகசிறந்த அறிவாளிகள் எல்லாம் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டே வெளியேறுகின்றனர்” எனவும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.