லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

விசேட ஊடகவியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 334 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாவாலும் மற்றும் 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 61 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,743 ரூபாய் ஆகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1904 ரூபாய் ஆகவும் மற்றும் 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 883 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.