இன அழிப்புப் போரில் தமிழர்களின் இழப்பிற்கு இதுவரை இல்லை நீதி – பிரித்தானிய நாடாளுமன்றில் அறிக்கை!
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரித்தானியா வாழ் தமிழர்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் சுதந்திர தினம் கரி நாள் என பிரகடனப்படுத்தி வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி 4 நாட்களுக்கு பேரணி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையிலேயே பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளதாவது,
“நியாயமான ஆட்சி நிர்வாகத்தை உறுதிப்படுத்தி, ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை நோக்கிய பாதையில் நாட்டை முன்னகர்த்திச் செல்லக்கூடியவாறாக இலங்கையின் அரச கட்டமைப்பு மாற்றமடைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 75 வருடகால வரலாற்றில் சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பிற்கு அடிப்படை காரணம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நிலையான அரசியல் தீர்வொன்றை சிறிலங்கா அரசாங்கம் கண்டடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இராணுவமயமாக்கல், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பன தொடர்பில் நீதி, பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமை மற்றும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வினை அடைவதில் ஏற்பட்டுள்ள தோல்வியை முன்னிறுத்தி தமிழர்கள் ஆதீனத்தை புறக்கணித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கனவே வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான சம்பவங்கள், காணி அபகரிப்பு மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் இன்னமும் தொடர்வதாகவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை