மாபெரும் மக்கள் பேரணி -தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் தீ சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம்
பல்கலைக்கழக மாணவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்கள், சிவில் சமூகங்கள் ஆகியோர் இணைந்தது முன்னெடுத்த வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி மாபெரும் மக்கள் பேரணி முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் தீ சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த, தவத்திரு வேலன் சுவாமிகள், மாவீரர்கள் எங்களுடைய தேசிய வீரர்கள் தங்களுடைய உயிரை தியாம் செய்தவர்கள், மாவீரச் செல்வங்களை தமிழ் மக்கள் அனைவரும் எப்பொழுதும் போற்றுகின்றார்கள்.
அப்படியான மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ள பூமி உன்னத பூமி அப்படிப்பட்ட புனிதர்களுக்கு நாங்கள் வீரவணக்கத்தையும் அஞ்சலிகளையும் மரியாதைகளை செலுத்துகின்றோம்.
அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இருக்கிற அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், ஒவ்வொரு மாவீரர் துயிலுமில்லத்தில் உள்ள ஏற்பாடு குழுக்கள் பராமரிப்புகளையும் நிகழ்வுகளையும் முன்னெடுக்கவேண்டும் என இந்த சந்தர்ப்பத்திலே அனைத்து மக்கள் சார்பிலும் தமிழ் உறவுகள் சார்பிலும் வலியுறுத்தி கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
மேலும், அடுத்ததாக உடையார்கட்டில் இந்த பேரணி நடைபெற இருக்கிறது என்றும் அதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகரில் ஒரு பேரணி இடம்பெற்று அதன் பிற்பாடு இன்று மாலை முல்லைத்தீவு நகரை சென்றடைய இருக்கின்றது என தெரிவித்தார். அனைத்து உறவுகளும் எழுச்சியாக இந்த பேரணியில் இருந்து கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
கருத்துக்களேதுமில்லை