பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்- பௌத்தப்பிக்குகள்

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள் கூட்டாக அறிவித்தனர்.

தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் சற்று முன்னதாக இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பௌத்தப்பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என அறிவித்தனர்.

"தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்" - பகிரங்கமாக தெரிவித்த பௌத்த பிக்குகள் | 13Th Amendment Sri Lanka Tamils Solution

"தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்" - பகிரங்கமாக தெரிவித்த பௌத்த பிக்குகள் | 13Th Amendment Sri Lanka Tamils Solution

பதின்மூன்றாம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்தப் பிக்குகளின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.