2023ம் ஆண்டின் முதல் கோடீஸ்வரர் இவர் தான்! கூரையை பிய்த்து கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்
முதல் முயற்சியிலேயே 33 கோடி ரூபா பரிசு வென்ற பிலிப்பைன்ஸ் பிரஜை துபாயில் லொத்தர் சீட்டிலுப்பு ஒன்றின் மூலமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரஜை ஒருவர் 33 கோடி ரூபா பண பரிசினை வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் கோடீஸ்வரராக பதிவாகியுள்ளார்.
லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வெல்வது என்பது பலருக்கு வாழ்க்கையே மாற்றி அமைக்கக்கூடிய ஒன்றாக அமைந்து விடுகிறது.
சீட்டிலுப்பில் பாரிய தொகை பண பரிசு வென்றெடுக்கும் போது ஏற்படும் உணர்வுகளை வார்த்தைகளினால் வரையறுத்து விட முடியாது, மகிழ்ச்சி ஆர்வம், ஆச்சரியம், நன்றி என பல்வேறு உணர்வுகள் பெருக்கெடுத்து ஓடுவதனை உணர்ந்து கொள்ள முடிவதாக கூறுகின்றனர்.
துபாயில் காப்பி ஷாப் ஒன்றின் முகாமையாளராக கடமையாற்றி வந்த பிலிப்பைன்ஸ் பிரஜையே இவ்வாறு பாரிய தொகை பணப்பரிசினை வென்றெடுத்துள்ளார்.
இந்த பிலிப்பைன்ஸ் பிரஜை எதிர்பாராத விதமாக இந்த மாபெரும் பரிசு தொகைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.
ரசல் ரைஸ் என்ற பிலிப்பைன்ஸ் பிரஜை கடந்த ஜனவரி மாதம் 13ம் திகதி வரையில் தான் ஒரு கோடீஸ்வரராகுவேன் என நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
ஈஸி சிக்ஸ் எமிரேட்ஸ் ப்ரோ எனப்படும் லொத்தர் சீட்டிலுப்பில் ரசல் பதினைந்து மில்லியன் திர்ஹம் அல்லது 33 கோடி இந்திய ரூபாய்களை வென்றெடுத்துள்ளார்.
ரசல் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இந்த ஆண்டில் பதிவான முதல் கோடீஸ்வரர் சீட்டு வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
15 திர்ஹம் அல்லது 333 ரூபாவினை கொடுத்து லொத்தர் சீட்டு கொள்வனவு செய்த ரசலிற்கு இந்த வெற்றி மிகப்பெரிய ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
முதல் தடவையாக லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்று ரசல் முதல் பரிசு செய்யும் வென்றெடுத்துள்ளார் என்பது ஆச்சரியமான விடயமாகும்.
தனது குடும்ப உறவினர்களின் பிறந்த திகதிகளை லொத்தர் சீட்டு வெற்றிலக்கங்களாக தான் தெரிவு செய்து வெற்றி ஈட்டியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த பரிசுத் தொகையை முதலீடு செய்ய உள்ளதாகவும் குடும்பத்தினருக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்க உத்தேசித்துள்ளதாகவும் ரசல் கூறுகின்றார்.
கருத்துக்களேதுமில்லை