கனடாவில் வாகனத்தை மெதுவாக செலுத்துமாறு கோரியவருக்கு நேர்ந்த சோகம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நபர் ஒருவர் வாகனத்தை மெதுவாக செலுத்துமாறு சைகை செய்ததற்காக அவர் மீது சராமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

65 வயதான குறித்த நபர் நாயுடன் வீதியில் நடந்து சென்ற போது, வேகமாக சென்ற வாகனமொன்றை பார்த்து மெதுவாக செல்லுமாறு சைகை செய்துள்ளார்.

கனடாவில் வாகனத்தை மெதுவாக செலுத்துமாறு கோரியவருக்கு நேர்ந்த சோகம் | Man Walking Dog Shot At 13 Times

 

இதனைத் தொடர்ந்து குறித்த வாகனம் பின்னோக்கி வந்ததாகவும், வாகனத்தில் இருந்த ஒருவர் கண்மூடித்தனமாக குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மீது 13 துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றாரியோவின் ஸாம்பர்க் என்னும் பகுதியின் சென்டர் வீதி மற்றும் ரெபிலியன் வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.