முஜிபுர் ரஹ்மான் பலிக்கடாவாகப் போவது எனக்குத் தெரியும் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டாம் என அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு தான் அறிவுறுத்தினார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தவர் தானே எனக் கூறிய ஜனாதிபதி, அவர் பலிக்கடா ஆக்கப்படப் போகின்றமை தமக்கும் தெரியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்றத்தில் வைத்திருக்க முயற்சித்ததாக தெரிவித்த ஜனாதிபதி, இனிமேல் அது பற்றி பேசப்போவதில்லை எனவும் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை