உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை- கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர், 19,000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், இதுவரை 15,000 ஆசிரியர்களே விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒரு மாதத்திற்கு முன்னரே சமர்ப்பிக்கப்பட்டதாகவும், சிரமங்கள் இருந்த போதிலும், அமைச்சரவை அதற்கு அங்கீகாரம் வழங்கியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ஓரளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பெறுபேறுகளை பூர்த்தி செய்வதற்கு 1,300 பல்கலைக்கழக பேராசிரியர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
அவர்களுக்கும் தொழில் ரீதியாக பிரச்சினை இருப்பதாக தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிதி அமைச்சுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை