கொழும்பிலிருந்து பதுளை சென்ற ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு!
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த கடுகதி ரயில் யத்தல்கொட நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது.
இன்று (23) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால் பதுளை செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், காலை 10.35 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் உதவியுடன் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான ரயில் பொல்கஹவெல நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை