தேர்தல் தொடர்பாக ரணில் வெளியிட்ட கருத்துக்கு நிமல் புஞ்சிஹேவா பதில் வழங்கியுள்ளார்!

“நாட்டின் அரசியலைப்பு, தேர்தல் சட்ட விதிகளுக்கு அமையவே உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் சம்மதத்துடனேயே தேர்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.”

இவ்வாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும், தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை அதிபர் ரணில் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“தேர்தலுக்கு இதுவரை நிதி கிடைக்காத நிலையில், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காக இன்றையதினம் (24) தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.