72 வயதான பெண்ணின் கண்ணில் மிளகாய்த்தூளை தடவி தங்க நகைகள் கொள்ளை ; 42 வயது பெண் கைது!

பதுளை, பொரலந்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்த பெண்ணின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தடவி, அவரின் கழுத்தை நெரித்து 3 லட்சத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளபப் எள போகஹகும்புர பொலிஸார் கைது செய்தனர்.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யயப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

72 வயதான மேற்படி பெண் தனது வீட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒருவர் மிளகாய் பொடியை கண்ணில் தடவி அவரது கழுத்தை நெரித்து கழுத்தில் காணப்பட்ட தங்க நகைகளே இவ்வாறு கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தின்போது சந்தேக நபரால் அபகரிக்கப்பட்ட தங்க நகைகளில் ஒன்று அங்கு காணப்பட்ட பாத்திரத்தில் கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.