யாழில் முதியவர்களை இலக்கு வைத்து ஒரே நாளில் 30 பேரிடம் கைவரிசை!

யாழ்ப்பாணத்தில் முதியவர்களை இலக்கு வைத்து கடந்த வியாழக்கிழமை மாத்திரம் 30 இற்கும் மேற்பட்ட பண மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாண புறநகர் பகுதிகளான சுன்னாகம் , தெல்லிப்பழை ,மல்லாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்ற நபர் ஒருவர் , தான் அப்பகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர் என அறிமுகப்படுத்திக்கொண்டு , வீடுகளுக்குள் சென்று சமுர்த்தி உதவிகளை பெற பதிவு செய்யவேண்டும் எனவும் அதற்காக பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி 5 ஆயிரம் ரூபா முதல் 10 ஆயிரம் ரூபா வரையில் வாங்கி மோசடி செய்துள்ளார்.

அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் பிள்ளைகள் வேலைகளுக்கு சென்ற வேளைகளில் ,வீடுகளில் முதியவர்கள் தனித்து இருக்கும் வேளைகளை பயன்படுத்தி வீடுகளுக்குள் சென்று ஏமாற்றி பணம் வாங்கியுள்ளார்.

சிலர் அது தொடர்பில் வேலையில் உள்ள பிள்ளைகளுடன் கதைத்து பணம் வாங்க வேண்டும் எனக்கூறிய போது , வேலையில் உள்ள அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் நான் நாளை வருகிறேன் என கூறி அங்கிருந்து நழுவி சென்றுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.