தேர்தல்களை நடத்துவதற்கான சட்டரீதியான தடைகள் எதுவுமில்லை – பவ்ரல்
தேர்தலை நடத்துவதற்கான சட்டரீதியான தடைகள் எதுவையுமில்லை என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்ககோரும் மனுவை உயர்நீதிமன்றம் மே 11 ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளதே தவிர தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியான தடை எவையுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் யதார்த்தத்தில் அரசாங்கம் நிதியை சுற்றுநிரூபங்கள் மூலம் தடைசெய்கின்றது என தெரிவித்துள்ள ரோஹண ஹெட்டியாராச்சி, எங்கள் நாடாளுமன்ற தலைவர்களால் மக்களின் வாக்குரிமை கேள்விக்குட்படுத்தப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பான விடயங்களுக்காக ஏற்கனவே 50 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளனர். இது பொதுமக்களின் பணம் என குறிப்பிட்டுள்ள பவ்ரலின் நிறைவேற்று பணிப்பாளர், தேர்தல் நடைபெறாவிட்டால் இந்த பணத்தை வீணடித்தமைக்கான பொறுப்பை அரசியல் தலைமையும் அரசாங்க அதிகாரிகளும் ஏற்பார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை