வடமாகாணத்தின் ஊடகவியலாளர்களுக்கு கௌரவிப்பு!
வடக்கு மாகாணத்தில் பல சவால்களின் மத்தியிலும், அச்சுறுத்தல்களையும் தாண்டி மக்களின் உரிமைக்காக பணியாற்றிவருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று (வெள்ளிக்கிpழமை) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்த கௌரவிப்பு நிகழ்வில் மக்களின் உரிமைகளப் பாதுகாப்பதற்காக மனித நேயத்தோடும், அர்ப்பணிப்போடும் தமது கடமைகளை வகைப்பொறுப்போடு முன்னெடுத்துவரும் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண ஊடகவியலாளர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.
வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் வவுனியா மாவட்டத்தின் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், கிளிநொச்சி மாவட்டத்தின் ஊடகவியலாளர் கதிரவேலு இரவீந்திரராசா, மன்னார் மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான றொசேரியன் லெம்பேட் மற்றும் யூட் பெலிஸ்ரஸ் பச்சேக், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான தம்பித்துரை பிரதீபன் முருகப்பெருமான் மதிவாணன், தங்கவேல் சுமன், நடராசா குகராஜ், விஜயகுமார் லோஜன், இளயகுட்டி சாரங்கன், கந்தசாமி பரதன், சுமித்தி தங்கராசா, தங்கராசா காணடீபன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.
கருத்துக்களேதுமில்லை