பல்கலைக்கழக மாணவர் ஒன்றிணைந்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!
கிழக்ககுப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் நிலவி வருகின்ற கல்வி மற்றும் நலன்புரி உட்கட்டமைப்பு தொடர்பான குறைபாடுகளை உடனடியாக தீர்க்கக்கோரி இன்று (வெள்ளிக்கிழமை)திருகோணமலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவ சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்தப் போராட்டம் அபயபுர சுற்று வட்டத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழாகத்தில் காணப்படும் விடுதிகள், விளையாட்டு மைதானம் மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான வசதிகளை உடனடியாகச் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி இந்தஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
பெருந்திரளான மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் காரணமாக வீதி ஊடான போக்குவரத்து பல மணி நேரம் தடைபட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை