வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகம் திறந்து வைப்பு!
வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது புதிதாக நிர்மானிக்கப்பட்ட கட்டடத்துக்கான பூஜை இடம்பெற்றதுடன், சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளரும் வடமாகாண திரைசேரியின் பிரதம கணக்காளருமான ஜெயராஜா, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், உத்தியோகத்தர்கள், தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த மாதம் முதல் வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் மாகாண ரீதியான சேவைகள் தொடர்பாக விடயங்கள் அலுவலகத்திலிருந்து இடம்பெறவுள்ளது. குறித்த அலுவலகத்தின் சேவைகளை பொதுமக்களும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், முறைப்பாடுகளையும் தெரிவிக்க முடியும் என அதன் தலைவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை