கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பிடியிலிருந்து நபரொருவர் தப்பியோட்டம்

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பிடியிலிருந்து போலியான பெயரில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றுள்ளார் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்த நபர் 24 ஆம் திகதி இரவு மற்றுமொரு நபருடன் வெளிநாடு செல்வதற்காக இரண்டு கார்களில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபருக்கு எதிராக இரண்டு வெளிநாட்டு பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.