நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஹெரோயினுடன் 12 பேர் கைது

நாட்டின் வௌ;வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 வரையிலான 24 மணித்தியால விசேட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி 12 கிராம் 72 மில்லி கிராம் ஹெரோயினுடன் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இருவேறு சுற்றிவளைப்புகளில் 24 மற்றும் 41 வயதுடைய இருவர் 5 கிராம் 10 மில்லிகிராம் மற்றும் 10 கிராம் 17 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துருகிரிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இருவேறு சுற்றிவளைப்புகளின் போது 6 கிராம் 20 மில்லிகிராம் மற்றும் 06 கிராம் 10 மில்லி கிராம் ஹெரோயினுடன் 28 மற்றும் 41 வயதுடைய அத்துருகிரிய மற்றும் கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மொரகஹஹேன, தலகல பிரதேசத்தில் 6 கிராம் 30 மில்லிகிராம் மற்றும் 7 கிராம் 60 மில்லி கிராம் ஹெரோயினுடன் தலகல மற்றும் ஹன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும் 43 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படல்கம, லிஹினியாகம பிரதேசத்தில் 5 கிராம் 44 மில்லி கிராம் ஹெரோயினுடன் 35 வயதுடைய படல்கம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை படோவிட்ட பிரதேசத்தில் 5 கிராம் 20 மில்லி கிராம் ஹெரோயினுடன் 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை வடக்கு, ஹொரந்துடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 5 கிராம் 160 மில்லி கிராம் ஹெரோயினுடன் பாணந்துறையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பிரதேசத்தில் 5 கிராம் 45 மில்லி கிராம் ஹெரோயினுடன் புறக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக வசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.