உலக தரவரிசையில் இலங்கை பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்
உலக பல்கலைக்கழகங்களின் ‘யுஎஸ் நியூஸ் இன்ஸ்டிட்யூட்டின்’ தரவரிசையின் படி உலகின் தலைசிறந்த 1,000 பல்கலைக்கழகங்களில் பேராதனைப் பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.
உலகளாவிய பல்கலைக்கழகங்களின் தரவரிசையின்படி, பேராதனை பல்கலைக்கழகம் உலகளவில் 901 ஆவது இடத்தையும் ஆசியாவில் 240 ஆவது இடத்தையும் பிடித்துள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இவ்வாறானதொரு புதிய அங்கீகாரத்தை பெற்ற முதலாவது பல்கலைக்கழகம் பேராதனை எனவும் பேராசிரியர் பாராட்டியுள்ளார்.
உலகப் பல்கலைக்கழகங்கள் அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் பதின்மூன்று சிறந்த குறிகாட்டிகள் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன .
மேலும் இந்த குறிகாட்டிகளில் உலகளாவிய ஆராய்ச்சி நற்பெயர், பிராந்திய ஆராய்ச்சி புகழ், வெளியீடுகள், மாநாடுகள் போன்றவை அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை