இலங்கையின் கடன் விவகாரம் – சரியான நேரத்தில் ஒழுங்கான நடைமுறைகள் அவசியம் – சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் கடன் விவகாரத்துக்கு சரியான நேரத்திலான ஒழுங்கான நடைமுறைகள் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜி – 20 அமைப்பின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு பொது கட்டமைப்பின் கீழ் சரியான நேரத்தில் ஒழுங்கான நடைமுறைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை