டிசம்பருக்குள் மக்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதி ஆலோசகர்

இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் டிசெம்பருக்குள் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பொருள்களின் விலை சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் மின் கட்டணமும் குறைக்கப்படும் எனவும் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையிலும் தனது அரசியலைப் பற்றி சிந்திக்காமல் மக்களைப் பற்றி சிந்தித்து இந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல ஜனாதிபதி முன்வந்தார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாடெங்கிலும் வரிசையில் நிற்கும் நிலைமை மாற்றியமைக்கப்பட்டது என்றும் இரண்டு மாதங்களில் அந்த யுகத்தை மக்கள் கடந்திருந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.