அரச நிறுவனங்களில் கட்டணம் செலுத்தவது டிஜிட்டல் மயமாக்கப்படும் !
அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் அரச நிறுவனங்களின் அனைத்து கட்டணங்களும் டிஜிட்டல் முறை மூலம் பெற்றுக்கொள்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டல்கள் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இணையப் பாதுகாப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை