கொழும்பு போராட்டத்தில் பொலிஸார் தண்ணீர், கண்ணீர்ப் புகைப் பிரயோகங்கள்!

ரண்டு நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை  பிறப்பித்துள்ள நிலையிலும் தற்போதைய அரசுக்கு எதிராக தேசிய மக்கள் படையானது போராட்ட இயக்கத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், கலைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டுள்ளதை காணமுடிகிறது.

இந்த ஊர்வலம் காரணமாக தாமரைத் தடாகம்  முதல் நகர மண்டபம் வரை பாரிய  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய மக்கள் படை போராட்டத்தின் மீது பொலிஸார் தண்ணீர் மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகங்களை  மேற்கொண்டனர்.

இருப்பினும், அவற்றை பொருட்படுத்தாமல்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.