தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வருவதாக தகவல்!
தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் இரண்டு தடவைகள் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் அரசாங்கத்தின் கோழைத்தனமான முயற்சிகளை முறியடிப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது
கருத்துக்களேதுமில்லை