இறக்குவானை சிறுவர் இல்லத்தின் 10 சிறுவர், சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் கைது!

இறக்குவானை சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுவர், சிறுமிகள் என 10 பேரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில்  குறித்த சிறுவர் இல்லத்தின் காப்பாளரின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகள் இல்ல காப்பாளர்  இல்லாத நேரத்தில் அவரது கணவர் இவ்வாறு  பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின்போது சந்தேகநபர் சிறுவர் இல்லத்தில் வைத்து பத்து சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்பு  உட்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.