மனித உரிமைகள் குழுவின் 137ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் 137ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது.

இந்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை உட்பட்ட 6 நாடுகளின் நிலைமைகள் இதன்போது, மீளாய்வு செய்யப்படவுள்ளன.

அதில் இலங்கை, பெரு, பனாமா, எகிப்து, சாம்பியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.

173 உறுப்பினர்கள் குழுவின் அடங்கும் இந்த 6 நாடுகளினதும் மதிப்பாய்வை, 18 சர்வதேச சுயாதீன நிபுணர்கள் மேற்கொள்வார்கள்.

இதன்படி, மனித உரிமை மீறல்கள், பாலின அடிப்படையிலான வன்முறைகள், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் இலங்கையில் அவசரகால நிலைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், நீதி மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் அமர்வில் பொது உரையாடல்கள் மூலம் விவாதிக்கப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.