கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி, உதவியாளரை கைது செய்ய பிரேஸில் பொலிஸாரின் உதவு கோரும் சிஐடி!
ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் அதிபரும் கோடீஸ்வர வர்த்தகருமான ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி மற்றும் உதவியாளரைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் ஊடாக பிரேஸில் பொலிஸாரின் உதவியை குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவிக்கையில் –
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா பொலிஸாரிடமும் பிரேஸில் பொலிஸாரிடமும் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒனேஷ் சுபசிங்கவின் பிரேஸில் மனைவியும் அவரது உதவியாளரும் தற்போது பிரேஸிலில் இருப்பதாக உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் கிடைத்துள்ளதால், பிரேஸில் பொலிஸாரிடம் இரகசியப் பொலிஸார் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின்பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்த விசாரணையில், ஒனேஷ் சுபசிங்கவின் சகோதரரான சுபாஷ் சுபசிங்க மற்றும் ஒனேஷின் வீட்டில் பணிப்பெண்களாகப் பணிபுரியும் ஐந்து பெண்களிடம் அதிகாரிகள் இதுவரை வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை