மொரட்டுவை ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலால் பலத்த சேதம்!

மொரட்டுவை நகரில் உள்ள பரிசுப் பொருட்கள் மற்றும் ஆடை விற்பனை நிலையத்தில் இன்று (27) அதிகாலை திடீரென தீ பரவியதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், வர்த்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மின்கலங்களிலிருந்து தீ பரவியிருக்கலாம் என தீயணைப்பு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.