இலங்கையர்களுக்கு ஆதரவு வழங்குங்கள் – தென்கொரியாவில் உலக தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார் மைத்திரி

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உலகத் தலைவர்கள் ஆதரவையும் உதவிகளையும் வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த இக்கட்டான காலங்களில் கடும் நெருக்கடிக்கு முகம் கொடுத்தவர்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாடு வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்வதற்கு, நேர்மையான ஆளும் கட்சியும், குறுகிய அரசியல் இலக்குகளுக்கு அப்பால் சிந்திக்கும் முற்போக்கான எதிர்க்கட்சியும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.