நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை?

தேர்தலை பிற்போடும் அரசின் சூழ்ச்சித் திட்டத்துக்கு துணை நிற்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சகல விதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் ஜனநாயகம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. போராட்டம் இல்லை, ஆர்ப்பாட்டங்கள்கூட நடத்துவதற்கு அனுமதி இல்லை. இந்நிலைமை ஆபத்தானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனக்கூறும் அரசு, வேறு நிகழ்வுகளை நடத்தி பணம் செலவளிக்கின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசை நடத்துவதற்கு ஒன்றரை நாளுக்கு செலலாகும் பணம்தான் தேர்தலை நடத்த அவசிம். அதனை வழங்கலாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் நிதி அமைச்சின் செயலாளர் மறுக்கின்றார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.