யாழ் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புற்றுநோயாளர்களுக்கான வைத்தியசாலை!

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடம் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.