நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் மரணத்திற்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதியே – எம்.ஏ.சுமந்திரன்

நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் மரணத்துக்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியவர் ஜனாதிபதி, நிதி அமைச்சர் ரணில் விக்கிரம சிங்கவே. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தவிடாது நிதியை தேவையான அளவு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கொடுக்காது முடக்கி வைத்திருப்பதும் ஜனாதிபதியே என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) திருகோணமலை சல்லி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் அரசாங்கம் பொலிஸாரை ஏவி விட்டு இத் தாக்குதலை நடாத்தி அதன் மூலமாக ஓர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற வகையில் அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டால் நிலைமை இன்னும் மோசமடையும்.

அப்படி மக்களுடைய ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்த உரித்தும் கிடையாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.