இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை!
நாட்டில் பல மாதங்கள் பரவலான ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகும், இலங்கை பொலிஸாருக்கு தொடர்ந்தும் தங்கள் கடமையை நினைவூட்ட வேண்டும் என்பது கவலை அளிக்கிறது என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் பொலிஸாரால் சட்டவிரோதமாக நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பயன்படுத்தியதன் விளைவாக எதிர்ப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சர்வதேச மன்னிப்பு சபையின் பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரீந்திரினி கொரையா தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அதிகாரிகள் தமது சக்தியைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கருத்துக்களேதுமில்லை