திருகோணமலை மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!
அரசாங்க பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்தார்.
பட்டினமும் சூழலும், கந்தளாய், பதவிஶ்ரீபுர, சேருவல, குச்சவெளி மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட அரிசி ஆலைகள் மூலம் பிரதேச செயலக ஒருங்கிணைப்பின் கீழ் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும.
நெல்லை கொள்வனவு செய்த அரிசி ஆலை உரிமையாளர்கள் அதனை அரசியாக குற்றி பிரதேச செயலகத்திற்கு வழங்க வேண்டும். குறித்த அரிசி எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வருமானம் குறைந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மாதமொன்றிற்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி என்றவாறு நிவாரண உதவியாக அரசாங்கத்தினால் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை