ரணிலால் ஒருபோதும் தீர்வு வழங்க முடியாது- ஜே.வி.பி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க முடியாது என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கூறியவை வருமாறு –
தமிழர்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக ரணில் நடத்தும் நாடகமே சர்வ கட்சிப் பேச்சு. அவரால் அரசியல் தீர்வை வழங்கவே முடியாது. இது தமிழர்களுக்குத் தெரியும்.
அவர்கள் ஒருபோதும் ரணிலின் நாடகத்துக்கு ஏமார்ந்து ரணிலுக்கு வாக்களிக்கமாட்டார்கள். தெற்கில் ஒரு குழப்பத்தை – இனவாதத்தை – ஏற்படுத்துவதற்கு ரணில் முற்பட்டார்.
அது நடக்கவில்லை. சிங்கள மக்கள் இனி ஒருபோதும் இந்த மாதிரியான சில்லறை இனவாதத்துக்குள் சிக்கமாட்டார்கள். – எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை