முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் மனு தள்ளுபடி !
முன்னாள் ஜனாதிபதி தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்பியதை எதிர்த்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, பூஜித் ஜயசுந்தரவின் சட்டத்தரணிகள் மனுவை வாபஸ் பெறுவதாக கேட்டுகொண்டமைக்கு இணங்க நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் தம்மை கட்டாய விடுப்பில் அனுப்பும் மைத்திரிபால சிறிசேனவின் முடிவு தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி ஜெயசுந்தர இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
கருத்துக்களேதுமில்லை