குறைக்கப்பட்டது மண்ணெண்ணெய் விலை!
மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.
இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைப்படுகின்றது.
இதற்கமைய மண்ணெண்ணெய் 305 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், தொழிற்துறைக்குப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலை 134 ரூபாவினால்(புதிய விலை 330 ரூபா) குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
கருத்துக்களேதுமில்லை