உள்ளாட்சித் தேர்தலை தாமதமின்றி நடத்துங்கள் – அமெரிக்க செனட் குழு இலங்கையிடம் வலியுறுத்து!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதமின்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மக்களின்பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் எந்தவொரு முயற்சியும் மறுக்க முடியாத ஜனநாயக விரோதமானது மற்றும் இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயலாகும் என அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் பிற்போடப்பட்டதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் தெரிவித்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை