இலங்கைக்கு 1,500 பயிற்சி இடங்களை வழங்கும் இந்திய பாதுகாப்புப் படைகள்: வினோத் கே ஜேக்கப்
இந்திய பாதுகாப்புப் படைகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 பயிற்சி இடங்களை இலங்கைக்கு வழங்குகின்றன. அவற்றுக்கு ஆண்டுதோறும் 70 லட்சம் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியுடன் சிறப்புத் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படுவதாக இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு வருகை தந்த இந்திய கடற்படை கப்பலான சுகன்யாவில் பயிற்சி பெற்ற இலங்கை பாதுகாப்பு படை வீரர்களிடம் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் –
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் வலிமையான மற்றும் நீடித்த தூண் பயிற்சியே இதுவாகும்.
தேசிய பாதுகாப்பு கல்லூரி, இந்திய இராணுவ கல்லூரி, விமானப்படை கல்லூரி மற்றும் இந்திய கடற்படை கல்லூரி போன்ற இந்தியாவின் முதன்மையான பாதுகாப்பு நிறுவனங்களில் படையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
கூடுதலாக, பல்வேறு சேவை சார்ந்த பயிற்சி தொகுதிகள் மற்றும் பணியாளர் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் பழைய மாணவர்களில் சிலர் இலங்கையின் சேவைத் தலைவர்கள் தரத்துக்கு உயர்ந்துள்ளமை இந்தியாவிற்கு பாரிய திருப்தியளிக்கும் விடயமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை