இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதித் தூதுவர் – சபாநாயகர் இடையே சந்திப்பு
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதித் தூதுவர் லார்ஸ் பிரெடல், சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதித் தூதுவர் லார்ஸ் பிரெடல் மற்றும் டான் கிரின்விக்ஸ் ஆகியோர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (27) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
பாராளுமன்ற பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் புதிய கட்டம் பற்றி பிரதித் தூதுவர் விரிவாகக் கூறியதுடன் சபாநாயகருக்கு இத்திட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தார்.
மேலும், இலங்கையின் அண்மைக்கால அபிவிருத்திகள் மற்றும் பரஸ்பர அக்கறையுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் பிரதித் தூதுவர் மற்றும் சபாநாயகருக்கிடையில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
கருத்துக்களேதுமில்லை