சர்வதேச கடற்புல் தினத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!
மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் வலிகாமம் கல்விவலயத்தில் தரம் 10,11 இல் நீருயிரின வளத் தொழிநுட்பவியல் பாடம் கற்கும் மாணவரிடையே கடற்புல் தொடர்பான அறிவுக் களஞ்சியப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசில்களும், சான்றிதழும் சர்வதேச கடற்புல் தினமாகிய மார்ச் 01 ஆம் திகதி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு வலிகாமம் கல்வி வலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் வலிகாமம் கல்விவலய நிர்வாகத்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஞா.ஆதவன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்திருந்தார்.
அத்துடன் Clean Ocean Force அமைப்பின் வடமாகாண பிரதிநிதி ம.சசிகரனும்,வலிகாமம் கல்வி வலய தொழிநுட்ப பாட ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவமும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை வலிகாமம் கல்விவலயமும், Clean Ocean Force எனும் அமைப்பும் இணைந்து நடத்தியிருந்தது.
கருத்துக்களேதுமில்லை