மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுண்ஸ்விக் தோட்டப்பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை அகழ்வுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றுக்கு அமைய, குறித்த தோட்டப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் மஸ்கெலியாவைச் சேர்ந்த 29,32 மற்றும் 65 ஆகிய வயதுடையவராவர். சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 8 ஆம் திகதியன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்து, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை