குளங்களை புனரமைக்க 30 கோடி ரூபா ஒதுக்கீடு!

பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்துக்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அம்பாந்தோட்டை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அநுராதபுரம், குருநாகல், புத்தளம், பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 30 கைவிடப்பட்ட குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

இந்தக் குளங்களின் கீழ் நெல் பயிரிடுவதற்குப் பதிலாக மரக்கறிகள் மற்றும் பழங்கள் பயிரிடுவதற்கு முன்னுரிமை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய அபிவிருத்தி திணைக்களத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.