டொலர் கிடைக்கும் பிரதான வழிமுறையை இழக்கும் அபாயத்தில் இலங்கை
விமானக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், அவர்களது சேவையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
138 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்படுகின்ற போதிலும் தற்போது 80 பேர் மாத்திரமே பணிபுரிந்து வருவதாக அதன் தலைவர் திசர அமரானந்த தெரிவித்துள்ளார்.
விமான நிலைய கட்டுப்பாட்டாளர்கள் என்பவர்கள் இலங்கை எல்லைக்கு வரும் அனைத்து விமானங்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பவர்களாவர். சர்வதேச விமானங்கள் இலங்கைக்கு வரும் போது அதற்கான பெருந்தொகை டொலர்கள் செலுத்தப்படுகின்றன.
கட்டுப்பாட்டாளர்கள் இன்றி அந்த சேவையை முன்னெடுத்துச் செல்வதென்பது இலகுவான விடயமல்ல. கடந்த வாரமும் ஒரு கட்டுப்பாட்டாளர் பணியை விட்டு விலகி வெளிநாடு சென்றார். இவ்வாறான நிலைமையில் இதனை இனிமேலும் எவ்வாறு நடத்தி செல்வதென தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், இலங்கை தனது சேவைகளின் மூலம் டொலர் வருமானத்தையும் இழக்க நேரிடும்.
தெற்காசியாவிலேயே சிறந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சேவையை இலங்கை வழங்குவதாகவும் அதனைப் பாதுகாக்க அதிகாரிகள் தலையிட வேண்டுமெனவும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரனந்த மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை